மதுரை நகரில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாநகர் காவல்துறை சார்பில் காலை தெற்குவாசல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் தலைமையில் தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர்கள் பிரபு, புவனேஸ்வரி மற்றும் காவல் ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் சுமார் 30 காவல்துறையினர்கள் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
போலீசாரின் அணிவகுப்பு தெற்குவாசல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குவெளி வீதியில் ஆரம்பித்து பாண்டியவேளாளர் தெரு, மேலமாசி வீதி, நேதாஜி ரோடு, தெற்கு ஆவணி மூலவீதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, சின்னகடை தெரு, தெற்கு மாராட் வீதி, புதுமகாளிபட்டி ரோடு, கிருதுமால் நதி ரோடு, எப்.எப்.ரோடு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, கிரைம் பிராஞ்ச் வழியாக தெற்குவாசல் சந்திப்பு வரை சென்று அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இதை போல ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் அணிவகுப்பை நடத்தினார்கள்.

சு.இரத்தினவேல்.
செய்தியாளர்
மதுரை.

