மதுரையில் போலீசார் கொடி அணிவகுப்பு.
===================
மதுரையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
மதுரை கீரைத்துறை காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட இடங்களான வாழைத்தோப்பு, சிந்தாமணி, காமராஜபுரம், நாகுபிள்ளை தோப்பு , புது மாகாளிப்பட்டிரோடு ஜெயவிலாஸ் சந்திப்பு, வில்லாபுரம் கிழக்கு தெரு போன்ற பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரை நகர் தெற்கு காவல் துணை ஆணையர் தங்கதுரை,மற்றும் தெற்கு வாசல் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில்
காவல் ஆய்வாளர்கள்
பிரபு, பெத்துராஜ், கதிர்வேல், முத்துக்குமார், ஸ்டெல்லாபாய், புவனேஸ்வரி, சந்தானமாரி , மற்றும் 15 சார்பு ஆய்வாளர்கள், 35 காவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சு.இரத்தினவேல்
செய்தியாளர்.
மதுரை.

