மதுரையில் போலீசார் அணிவகுப்பு.
°°°°°°°°°°°°°°°°°°°°°
மதுரையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.
மதுரை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையரின் ஆலோசனையின்படி
இன்று காலை தெற்கு வாசல் காவல் சரக காவல் உதவி ஆணையரின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பெத்துராஜ், ஸ்டெல்லா மேரி மற்றும் 50 காவலர்கள் இருசக்கர வாகனத்தில் கீரைத்துறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீரைத்துரை, வாழைத்தோப்பு , காமராஜபுரம், அனுப்பானடி, சிந்தாமணி மற்றும் சரக எல்லைக்குள் இருசக்கர வாகனங்களில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்.
மதுரை.

