கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகம் திறப்பு விழா
வேதாரண்யம் பிப் 4
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குபனையூரில் கிராமப்புற குழந்தைகளுக்கான நூலகத்தினை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் திறந்து வைத்தார்.
நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி மேற்பார்வையில், முதற்கட்டமாக 04.02.2022-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குபனையூரில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் நூலகத்தினை திறந்து வைத்து தெரிவித்ததாவது
இந்த நூலகத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லதரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவா்களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராணகதைகளும், போட்டித் தேர்விற்கு தயராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் வாழ்க்கைமுறை கோட்பாடுகள் மற்றும் பொது அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

