தூத்துக்குடியில் தேசதந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் சிபிஎம், சிஐடியூ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் 1ம் கேட் காந்தி சிலை முன்பு மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் தேச நலம், சமூக ஒற்றுமை, வன்முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் ரசல், கட்டுமான தொழிலாளர் சங்கம் மாரியப்பன், உப்பு தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன், விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் கேபி ஆறுமுகம், துணைத் தலைவர் சீனிவாசன், சிபிஎம் புறநகர செயலாளர் ராஜா, மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் பூமயில், வாலிபர் சங்க மாவட்ட செயலளர் முத்து, மாணவர் சங்கம் தலைவர் ஸ்ரீநாத், செயலாளர் ஜாய்சன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் காங்கிரஸ் மாநில செயலாளர் சிந்தியா வயலட் லில்லி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஓபிசி தலைவர் ஜெயகொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், நிர்வாகிகள் பஞ்சாயத்ராஜ் சங்க தலைவர் பாரகன் அந்தோணிமுத்து, டிசிடியூ தலைவர் சிவராஜ் மோகன், ஐ.என்.டி.யூ.சி உப்பு சங்க மாவட்ட தலைவர் காங்கிரஸ் எடிசன், நிர்வாகிகள் மிக்கேல் குருசு, சுந்தர்ராஜ், சம்சுதீன், ராஜபாண்டியன், ஏசுதாஸ், சேவியர் மிசியர், நேரு, அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.