*விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3பேர் கைது – வாகனம் பறிமுதல்.*
???? *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் அறிவுரைப்படி உட்கோட்டம் முழுவதும் காவலர்கள் உஷார் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.*
???? *இந்நிலையில் காவலர்கள் எப்போதும்வென்றான் சிவஞானபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த TN69E8983 TATA SUMO என்ற வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கடத்த முயன்றது தெரியவந்தது. சுமார் 50கிலோ எடையுள்ள 21 மூட்டைகளில் சுமார் 1டன் ரேஷன் அரிசியை முத்துச்செல்வம் (41) த/பெ நாகராஜ்,ஹௌசிங் போர்ட், தூத்துக்குடி, பாலமுருகன் (37) த/பெ மாடசாமி , அண்ணா நகர், தூத்துக்குடி, முத்து (38) த/பெ அற்புதம் ,காமராஜ் நகர் , தூத்துக்குடி ஆகிய 3 பேர் கடத்த முயன்றது தெரியவந்தது. அரிசி கடத்தியவர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.*
???? *சிறப்பாக செயல்பட்டு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாகனத்தை விரைவாக பிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

