வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்மந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு.
வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 28.01.2022 முதல் இன்று 04.02.2022 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கல் சம்பந்தமாக போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் உட்பட காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

