கடந்த 22.01.2022-ஆம் தேதி மதுராந்தகத்திலிருந்து சிவகங்கைக்கு அரசு டாஸ்மாக் பாட்டில் லோடு ஏற்றி சென்ற வாரி திருச்சி டோல்பிளாசாவில் நிற்கும் சமயத்தில் பார்த்த போது யாரோ வாரியின் தார் பாயை கிழித்து 36 பெட்டி அடங்கிய 725 பாட்டில் திருடப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக லாரியின் ஓட்டுநர் செல்வம் 36/22 த/பெ சண்முகம், எண் 101, மாரியம்மன் கோவில் தெரு, பக்கம் கிராமம், மதுராந்தகம், செங்கல்பட்டு என்பவர் சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுசம்மந்தமாக சமயபுரம் காவல்நிலைய கு.எண் 20/2022 ச/பி 379 இ.த.ச-ன்படி வழங்குபதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், காவல்துறை தலைவர், மத்திய மண்டலம் V. பாலகிருஷ்ணன், இ.கா.ப உத்தரவின் பேரில், சரவண சுந்தர், இ.கா.ப, காவல்துறை துணைத்தலைவர், திருச்சி சரகம் மற்றும் சுஜீத்குமார், இ.கா.ப, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்பார்வையில், இரண்டு தனிப்படைகள் நமச்சிவாயம், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட குற்றப்பிரிவு, திருச்சி மாவட்டம் தலைமையில் அமைக்கப்பட்டது.
மேற்படி தனிப்படைகள் 23.01.2022-ம் தேதி முதல் திருச்சியிலிருந்து சென்னை வரை உள்ள அனைத்து CCTV கேமிராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் 03.02.2022-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின்படி சிறுகனூர் சணமங்களம் பிரிவு ரோடு, திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்களான 1) கோடீஸ்வரன், 47/22, கும்மிடிப்பூண்டி, 2) பழனிசாமி, 40/22, கீரனூர், 3) தங்கபாண்டி, 24/22 4) தினேஷ, 35/22, மற்றும் 5) கிரி, 41/22 சென்னை ஆகியோர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மேற்படி அரசு டாஸ்மாக் பாட்டில் வோடு வாரி நெடுஞ்சாலையில் வரும் போது தங்களது இரண்டு Eicher நான்கு சக்கர வாசுளங்களான. TN18-K-2529 மற்றும் TN04-M-6667-ஐ பயன்படுத்தி லோடு லாரியின் முன்பக்கம் ஒரு வாகனமும், பின்புறம் ஒரு வாகனமும் சென்று லோடு லாரியின் மீது ஏறி தார்பாயை கிழித்து மதுபாட்டில் பெட்டிகளை திருடியதாக ஒப்புக் கொண்டனர்.
மேற்படி நபர்களை கைது செய்து அவர்கள் திருடிச் சென்ற மதுபாட்டில்களை விற்ற பணம் ரூ.1,40,000/-மும் மீதமுள்ள 103-பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளை கண்டுபிடிக்க விரைவாக செயல்பட்ட தனிப்படையினரை காவல்துறை தலைவர், மத்திய மண்டலம் பாலகிருஷ்ணன், இ.கா.ப , சரவண சுந்தர், இ.கா.ப, காவல்துறை துணைத்தலைவர், திருச்சி சாகம் மற்றும் சுஜீத்குமார், இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம் வெகுவாக பாராட்டினார்.

