குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக இருச்சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது – 99 மது பாட்டில்கள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல்.*
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் தலைமையில் விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் முதல் நிலை காவலர் பால்ராஜ், காடல்குடி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் முத்துகாமாட்சி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (03.02.2022) குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவைப்பார் மேட்டுப்பாளையம் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தர்மம் (48), த/பெ. சேசைய்யா, கடற்கரை காலனி, கீழ வைப்பார் என்பதும் சட்டவிரோத விற்பனைக்காக அதிக அளவிலான மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியதும் தெரியவந்தது.*
உடனடியாக மேற்படி போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 99 மதுபாட்டில்கள் மற்றும் TN69 AM 8295 (TVS Scooty Zest) என்ற எண் கொண்ட இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.*
இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.*

