பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்
வேதாரண்யம் பிப் 3
விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துதல் தொடர்பாக 2014 முதல் 2016 வரைதமிழ்நிலம் மென்பொருளில் கிராம கணக்குகள் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட கீழ்க்கண்ட பட்டா பிழை திருத்தங்கள் (கணினிபிழைகள் மட்டுமே) செய்திட கிராமங்கள் தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உட்பிரிவுஎண்–புலஎண் தவறாக இருந்தால், பரப்பு திருத்தம், பட்டாதாரர் பெயர் (அ) தந்தை, பாதுகாவலர் பெயர் திருத்தம், உறவுமுறை திருத்தம், பட்டாவில் உள்ளகலங்கள் காலியாக குறிப்பிடப்பட்டுள்ள இனங்கள், பரப்பு, பட்டாதாரர் பெயர் அருகிலுள்ள பரப்பு, பட்டாதாரர் பெயர் மாறி இருப்பது எதிர்வரும் வாரத்தில் 04.02.2022 அன்று நாகப்பட்டினம் வட்டத்தில் சிக்கல் கிராமத்திலும், கீழ்வேளுர் வட்டத்தில்; வெங்கிடங்கால், ராதாமங்கலம் ஆகிய கிராமங்களிலும், வேதாரண்யம் வட்டத்தில் வெள்ளப்பள்ளம் கிராமத்திலும், திருக்குவளை வட்டத்தில் மீனம்பநல்லூர் கிராமத்திலும் நடைபெறஉள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கிராம பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

