பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஏ. அசோகன், கழக அமைப்புச் செயலாளர் கே.டி. பச்சைமால், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், நாகர்கோவில் மாநகர கழகச் செயலாளர் சந்துரு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளர் ஸ்ரீ லிஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

