• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

policeseithitv by policeseithitv
February 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றார்கள். பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி, பிப்,3

தூத்துக்குடியில், தமிழக அரசின் சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தியினை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

 

குடியரசு தினத்தன்று டெல்லி அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஊர்தி சென்னையில் நடைபெறும் என குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்திருந்தார். அதன்படி வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவற்றை கொண்டுள்ள அலங்கார ஊர்தி 01.02.2022 மற்றும் 02.02.2022 ஆகிய இரண்டு நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் வந்தடைந்தது. பின்னர் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எட்டயபுரம் – விளாத்திகுளம் பைபாஸ் சாலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்து மலர்தூவி வரவேற்பளித்தனர். பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த அலங்கார ஊர்தி தூத்துக்குடி வருகை தந்தது. முன்னதாக மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மலர் தூவி வரவேற்பு அளித்தார். இந்நிலையில், தூத்துக்குடி வ.உ.சி. போக்குவரத்து பூங்கா முன்பு மக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டது. இதனை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். . அதுபோல்

மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டினத்தில் வரவேற்ப்பு தந்தார்கள் அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அருகில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும்

பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பார்த்து பயன்பெற ஏதுவாக அலங்கார ஊர்தியினை

நேற்று(02.02.2022) மாலை 4.30 மணிக்கு மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கோரம்பள்ளம் அருகில் மலர் தூவி வரவேற்றார்கள். தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்த பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க

தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் அவர்கள் மற்றும் செய்தித் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு தமிழகம் முழுவதும் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரடி பார்வையில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் இதனை கண்டு ரசித்தனர் தென்மண்டல செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் அண்ணா அவர்கள் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமாரி தென்காசி விருதுநகர் மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்தி செல்வதற்கு ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வந்தார் அதோடு மட்டுமல்லாமல் மாவட்ட தலைநகரில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களை முன்னேற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கி சிறப்பாக அலங்கார ஊர்தி காட்சிப்படுத்தப்பட்டது. இதனை தமிழக முழுவதும் பொதுமக்கள் பெண்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கண்டுகளித்தனர் தமிழக அரசின் இந்த சிறந்த முயற்சியையும் செய்தி மக்கள் தொடர்பு துறை செய்துவந்த இந்த சிறப்பான ஏற்பாடுகளை அனைத்து தரப்பினரும் பாராட்டி மகிழ்ந்தனர்

செய்தி தொகுப்பு

எம். ஆத்தி முத்து

Previous Post

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கொடியேற்று விழா.

Next Post

புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

Next Post
புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை  விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

புதூர் பேரூராட்சி அலுவலக வேட்புமனு தாக்கல் பாதுகாப்பு பணியை விளாத்திகுளம் டிஎஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In