வேதாரண்யம் அரிமா சங்கம் சார்பாக நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அரசு மருத்துவமனைக்கு பல அளவுரு நோயாளி கண்காணிப்பு கருவி (MULTI PARAMETER PATIENT MONITOR ) மற்றும் படுக்கை கட்டிலை மருத்துவமனை மருத்துவர் கலாவிடம் வேதாரண்யம் அரிமா சங்க தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கோடிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் பி சுப்பிரமணியன் முன்னிலையில் அரிமா சங்க வட்டார தலைவர் எல்விஸ் லாய் மச்சோடா வழங்கினார். இதன் மதிப்பு 30 ஆயிரம் ரூபாயாகும். இவ்விழாவில் செயலாளர் லயன் பாஸ்கரன் ,லயன் டாக்டர்.அனந்தராமன்,லயன் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை மருந்தாளுநர் கோவிந்தசாமி நன்றி
கூறினார்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

