தமிழ் வளர்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை – மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி கௌரவித்தார்
வேதாரண்யம் ஜன 31
நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 12 மாணவர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.10,000க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு 02.10.2021 அன்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு 24.11.2021 அன்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
அப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம்; பரிசாகரூ.2000 மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களில் சிறப்பு பரிசாக இரண்டு பேருக்குத் தலா ரூ.2000க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார். மேலும், மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த குறிப்புகள் வரைவுகள் எழுதியஅரசுப் பணியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்திற்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்டத் தமிழ் வளர்ச்சிஉதவி இயக்குநர் முனைவர் இரா.அன்பரசி முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்டச் செய்தியாளா்
வேதாரண்யம்

