• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருப்பூர் அமாவாசைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் வேட்பாளர்கள் முடிவு ?

policeseithitv by policeseithitv
January 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருப்பூர் களைகட்டும் தேர்தல் களம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

திருப்பூர் அமாவாசைக்கு பிறகு வேட்புமனு தாக்கல் வேட்பாளர்கள் முடிவு ?

திருப்பூர் – 31

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் 28ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், ஜனவரி 31 அம்மாவைசைக்கு பிறகு வேட்புமனுவை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் காத்திருந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்பு மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் எனவும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 7ஆம் தேதி எனவும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்து இருந்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என தெரிகிறது. தேனி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒரு சில இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4 ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் இதர கட்சிகள் மும்முரம் காட்டி வருவதால் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

 

மேலும், பிரதான கட்சி சார்பாக போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் நேற்றும், இன்றும் வேட்புமனுவை தாக்கல் செய்ய முன்வரவில்லை.

 

இதற்கு கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு, மற்றும் ஆவணங்கள் தயார் செய்வதில் தாமதம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.

 

சில இடங்களில், ஆவணங்கள் உட்பட அனைத்தும் தயாராக இருந்தும், ஆன்மீக அடிப்படையில் நல்ல நாள் இல்லை என்ற காரணத்தினால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சில வேட்பாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக நல்ல நாளன்று வேட்புமனு தாக்கல் செய்தால் தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் எனவும் சில வேட்பாளர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது

 

அந்த வகையில், ஜனவரி 31-ம் தேதிக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் தீவிரம் அடையும் என கூறப்படுகிறது. தை அமாவாசையை முன்னிட்டு பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் நல்ல நாளைப் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பு ஆகியுள்ளது.

செய்தி தொகுப்பு:

ப.மணிகண்டமூர்த்தி

திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

8110018132

Previous Post

இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச் சங்கம் சென்னை மண்டலத்தின் சார்பில் 73 வது  குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Next Post

தமிழ் வளர்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை – மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி கௌரவித்தார் 

Next Post
தமிழ் வளர்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை – மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி கௌரவித்தார் 

தமிழ் வளர்த்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை – மாவட்ட ஆட்சியா் டாக்டர் அருண்தம்புராஜ் வழங்கி கௌரவித்தார் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In