இந்திய மக்கள் உரிமை நீதி பொது நலச் சங்கம் சென்னை மண்டலத்தின் சார்பில் 73 வது குடியரசு தினவிழா
கோலாகலமாக நடைபெற்றது.
———–
சேத்துப்பட்டு, ஜனவரி, 31
குடியரசு தின விழாவை யொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பரிசளிப்பு விழா சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்றது.
. விழாவுக்கு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி விஜயசேகர் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் செங்கை சத்தியா நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றினார்.
சங்க நிர்வாகிகள் வேலாயுதம், சண்முகம், சின்னதுரை, கஜேந்திரன், சாய்பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார்.
விழாவில் இந்திய மக்கள் உரிமை நீதி முதல்வர் சங்கத்தின் நிறுவனர் & தேசியத்தலைவர் மக்கள் புரட்சியாளர் பாரத சேவா ரத்னா டாக்டர் பால.கன்னியப்பன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் அரிமா முருகானந்தம், பொறியாளர் அணி தலைவர் துக்காராம், மகளிரணி செயல் தலைவர் நாகலட்சுமி, இணைச்செயலாளர் முரளி, இளைஞரணி தலைவர் மோகன், மாணவரணி தலைவர் கிரன், அமைப்புச் செயலாளர் பார்த்திபன், புதுச்சேரி மாநில செயலாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி அமைப்புச் செயலாளர் தினகரன், துணைச் செயலாளர் இராம சுந்தரம், மகளிர் அணி இணைச் செயலாளர் பாத்திமா, தொழிலாளர் அணி இணைச் செயலாளர் பர்வீன் பானு, மகளிர் அணி துணை அமைப்பாளர் மீனாட்சி, அண்ணாநகர் நகர மகளிரணி செயலாளர் லட்சுமி, ஓட்டுனர் அணி துணை செயலாளர் செந்தில்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, விவசாய அணி துணை தலைவர் சுந்தர், இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகரன் உட்பட மாநில மாவட்ட பெருநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி விழுப்புரம் எம் ஜி முருகன்

