உலகலாவிய பெரும் தொற்று குறித்து சிவனடியார் திருக் கூட்டத்தினர்
புதுச்சேரி முதல் வில்லியனூர் வரை விழிப்புணர்வு ஊர்வலம்!
—————–
விழுப்புரம்,ஜன,31
புதுச்சேரி, ஒருங்கிணைந்த சிவனடியார் திருக் கூட்டத்தினர், சார்பில்
நாட்டு நலம்,நமது நலம் வேண்டி ஆன்மிக அன்பர்கள் சூழ்ந்த பெரியோர்களுடன் இணந்து, உலகலாவிய பெருந் தொற்று குறித்து,அனைத்து மக்களுக்கும், விழிப்புணர்வை, ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி வேத புரீஸ்வர ஸ்வாமி ஆலயத்தில், வழிபாடு நடத்தி,உலகப் பொதுமக்கள் நலனுக்காக,
இறைவனிடம் இறைஞ்சி,அம்மையப்பர் , சிவகாமசுந்தரி நடராசபெருமான் உலாவர,பல்வேறு கயிலாயவாத்தியக்குழுக்கள் முழங்க, பல குழுக்கள் திருவாசகம் ஓதிவர, பிள்ளைகள் அம்மையப்பர் வேடம்அணிந்து நடனமிட்டுவர, சிறியோர் பெரியோர் சாதுக்கள் என பலதுரப்பட்டவர்கள் சூழ காந்திவீதி, நேருவீதி காமராசர் வீதி, வழியாகவந்து கதிர்காமம் , மேட்டுப்பாளையம் ,மூலக்குலம் அரும்பாத்தபுரம், வழியாக , வில்லியனூர் காமேஸ்வரஸ்வாமி,
ஆலயம் வரை நடை பயணமாகச் சென்று சுவாமுயை வழி பட்டு, நிறைவு அடைந்தது விழா நிகழ்ச்சியில் புதுவை சட்டமன்ற சபாநாயகர் ஏம்பலம் ஆர்..செல்வம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். சுமார் 5000 பேருக்குமேல் அன்னம் பாலிப்புடன் நிழ்ச்சி நிறவடைந்தது. வழியில் புதுச்சேரி அம்மையப்பர் அறப்பணி அறக்கட்டளை மற்றும் பல அமைப்புகள் சார்பாக பிஸ்கேட் , டீ தண்ணீர்,மாஸ்க் போன்றவை வழங்கினர் . சிவனடியார் திருக் கூட்டத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் விழிப்புணர்வு புதுச்சேரி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.


