தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் கோடியக்கரை,வேதாரண்யத்தில் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்தனர் .
வேதாரணியம்
ஐன 31
ஆடி தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து புனித நீராடுவது இந்துக்களின் பெரும்பாலானோர் கடலில் புனித நீராடுவது வழக்கம் .அது போன்று இன்று தை அமாவாசையை ஒட்டி நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரையில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர். கடந்த ஆடி மாதம் கொரோனா தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டிருப்பதால் வேதாரண்யம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து வேதாரணியம் கோடியக்கரைக்கு கடற்கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர்.

பாதுகாப்பு பணியில் வேதாரண்யம் காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா தலைமையிலான காவல்துறையினரும், கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர். கடற்கரை பகுதியில் பக்தர்கள் நீராடுவதற்கு ஏற்ற வசதிகளை கோடிக்கரை ஊராட்சி தலைவர் எஸ் .பி. சுப்ரமணியன்,வேதாரண்யம் வட்டாச்சியர் உள்ளிட்டநிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

