ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், எஸ்.பி.பட்டணம் பஞ்சாயத்து சார்பாக 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று(26.01.2021) தேசிய கொடி ஏற்றப்பட்டது.

எஸ்.பி.பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் சுலைஹாபீவி சகுபர்சாதிக் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பட்டணம் ஊராட்சி மன்ற துணை தலைவர், மன்ற உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

