தேன்கனிக்கோட்டை அருகே சுதந்திர போராட்ட தியாகி கௌரவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசாமி கவுடு 102 வயதான இவர் சுதந்திரபோராட்டகாலத்தில் காமராஜர் உடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டு உள்ளார். இவர் ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் வீட்டின் முன்பு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருகிறார். இவரை கெளரவபடுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் துரை, தேன்கனிக்கோட்டை தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் செல்வம் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று தியாகி மரியசாமி கவுடு விற்கு பொண்னnடை போர்த்தி கெளரவித்தனர் மேலும் அரசு சார்பில் பரிசுகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.

