சென்னையில் கவசம் அறக்கட்டளை சார்பில் 73 வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்!!
சென்னை,
ஜனவரி 27
சென்னையில்
73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கவசம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று
கவசம் அறக்கட்டளை சார்பில் அதன்
தலைமை அலுவலகத்தில்
அறக்கட்டளையின்
பொதுச் செயலாளர் பா.அனிஷ் குமார்,
தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த இந்நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர் செய்த தியாகிகளின் தியாகம் போற்றப் பட்டது. பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
சிபி கிருஷ்ணன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் கே முருகன் பொதுச் செயலாளர் பா. அனிஷ் குமார், பொருளாளர் எஸ். தணிகாச்சலம் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

