வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டனம் முழங்குவோம் ஆர்பாட்டம்
வேதாரண்யம் ஜன 26
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் மார்க். கம்யூ. கட்சி சார்பில் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் புறக்கணிக்கப்பட்ட தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களை போற்றுவோம், ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டனம் முழங்குவோம் என்ற தலைப்பில் ஆர்பாட்டம் ஒன்றியக்குழு தோழர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது.
மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயற்குழு கோவை.சுப்பிரமணியன், வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி, வடக்கு ஒன்றியச் செயலாளர் வெற்றியழகன், மாவட்டக்குழு பன்னீர்செல்வம் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு இளையபெருமாள், கோபாலகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், மரியசெல்வராஜ், முருகேஸ்வரி, பிரபு, பாண்டியன், அம்பிகாபதி, முருகையன், அல்லாபிச்சை, பாலசுப்பிரமணியன், முருகானந்தம், வெண்சங்கு, தங்கசூர்யா உட்பட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்

