வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டிடத்தில் குடியரசு தின விழா
வேதாரணியம்
ஜன 26
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின விழா நமது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டிட வளாகத்தில் நாடளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் தலைமையேற்க சர்தார் வேதரெத்தினம் அவர்களின் பேரன் கயிலை மணி அ.வேதரெத்தினம் தேசிய கொடியை கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் காங்கிரஸ் நகரத்தலைவர்
வைரவன் துணைத்தலை வர் அர்ஜுனன் நாகை சிறுபான்மை தலைவர் REM ரபீக்,மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஆப்கான்,சோட்டாபாய், சர்தார் வேதரெத்தினம் அவர்களின் பேரன் கேடிலியப்பன், INTUC துணை தலைவர் தங்கமணி,தாயுமானவன், சேகர்,மகளிரணி சார்பில் செல்வராணி,தமயந்தி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், பெரியோர்கள் கலந்து கொண்டனர்.
சர்தார் வேதரெத்தினம் மற்றும் தியாகி
வைரப்பன் திருஉருவ
சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.

செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

