மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் காலமானார்.
மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கலாவதி (41) என்பவர் நேற்றிரவு காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது மயக்கம் அடைந்துள்ளார்.
உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் விராடிபத்து பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பெண் காவலரின் திடீர் இறப்பு காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சு.இரத்தினவேல்.
செய்தியாளர்.
மதுரை

