• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி, புதியம்புத்தூர் அருகே லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்

policeseithitv by policeseithitv
January 10, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி, புதியம்புத்தூர் அருகே லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று விசாரணை.*

*♻️ புதூர்பாண்டியாபுரம் டோல்கேட் அருகே உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உள்ள ஒரு யார்டில் ஒரு லாரியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப அவர்களுக்கு உடனடியாக சென்று சோதனையிட்டு விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் அவர்கள் தலைமையில் தனிப்பரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன், புதியம்புத்தூர் தனிப்பிரிவு தலைமை காவலர் அருள் முருகன் மற்றும் சிப்காட் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவானர் உள்ளிட்ட போலீசார் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த யார்டில் நின்று கொண்டிருந்த TN 51 K 7099 டாரஸ் லாரியை சோதனை செய்ததில், அதில் சுமார் 20 டன் எடையுள்ள ரூபாய் 10 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் மேற்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டத்தில் மேற்படி லாரி நிறுத்தியிருந்த யார்டு ராகேஷ் 38/21 த/பெ. ஜெயராஜ், போல்பேட்டை, தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமானது என்றும், மேற்படி லாரி ராஜேஷ் த/பெ. கணேசன், மில்லர்புரம், தூத்துக்குடி என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.*

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் மேற்படி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின் மேற்படி போலீசார் லாரியையும், அதில் இருந்த ரூபாய் 10 கோடி மதிப்பிலான சுமார் 20 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளையும் கைப்பற்றி இன்று (10.01.2022) தூத்துக்குடி வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.*

மேற்படி லாரியில் பதுக்கி வைத்திருந்ததை செம்மரக்கட்டைகளையும் லாரிiயையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.*

 

Previous Post

போலீசாருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு – குழந்தைகள் பாலியல் புகார் வந்த உடன் 30 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும்

Next Post

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

Next Post
தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

தற்காலிக கொரோனா நோய் பராமரிப்பு மையத்தை நாகை ஆட்சியர் ஆய்வு செய்தார் .

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In