கோடிக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை ஊராட்சி தலைவர் வழங்கி தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம்
ஜன 08
பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் பச்சரிசி ,வெல்லம், முந்திரி ,திராட்சை, ஏலக்காய் , பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகை கால சமையலுக்காக மிளகாய்தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம் , மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை , கோதுமை மாவு, உப்பு ஆகியவை துணிப்பையில் , முழு கரும்பும் என 21 பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அடங்கிய பையை பயனாளிகளுக்கு கோடிக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் குமார்,கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் அருளானந்தம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் ஜி.ஞானசேகரன் , என்.பீர்முகமது , எஸ். முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

