• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

policeseithitv by policeseithitv
January 5, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
வேதாரண்யம் ஜன 5
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2022 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு நடைப்பெற்ற சிறப்பு சுருக்கத் திருத்தம் 2022 -க்கான இறுதிவாக்காளர் பட்டியல் இன்று 05.01.2022 காலை 10.30 மணிஅளவில் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட்டஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், இறுதிவாக்காளர் பட்டியலானது வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்; இன்று வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 163 நாகப்பட்டினம், 164 கீழ்வேளுர் மற்றும் 165 வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 163 நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் 221 வாக்குச்சாவடிகளும், 164 கீழ்வேளுர் சட்டமன்றத் தொகுதியில் 203 வாக்குச்சாவடிகளும் மற்றும் 165 வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் 227 வாக்குச்சாவடிகளும் ஆக மொத்தம் 651 வாக்குசாவடிகள் உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 69 ஆயிரத்து 866 ஆகும். இதில்; 2இலட்சத்து 77ஆயிரத்து 161 ஆண் வாக்காளர்களும், 2 இலட்ச்தது 92 ஆயிரத்து 684 பெண் வாக்காளர்களும் மற்றும் 21 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் முறையே கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளனர்.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 94 ஆயிரத்து 641 ஆண் வாக்காளர்களும், 98 ஆயிரத்து 834 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர் 1 என 1,93,476 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும், 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற உள்ள தொடர் திருத்தத்தில் பொதுமக்கள் தங்களின் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் சமர்ப்பித்தோ ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்அருண்தம்புராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்,
வேதாரண்யம்.

Previous Post

தூத்துக்குடியில் தொழில் முனைவோர் & வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

Next Post

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Next Post

தமிழக அரசு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In