• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு

policeseithitv by policeseithitv
January 3, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2018ம் ஆண்டு நடைபெற்ற திருட்டு வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த 2 எதிரிகளை கைது செய்த தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன், தலைமை காவலர் கணேசன் மற்றும் முதல் நிலை காவலர் பிரபாகரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்தும், அவரிடமிருந்து திருடிய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர் தங்கபாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி திருட்டு வழக்கில் ஈடுபட்ட 4 எதிரிகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், முறப்பநாடு காவல் நிலைய தலைமை காவலர் சுந்தர்ராஜ், தட்டப்பாறை காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 2009ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளில் சம்மந்தப்பட்டு நீதிமன்ற பிடியாணை நிலுவையில் இருந்த எதிரியை கைது செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மாணிக்கவாசகம் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 77 வழக்குகளை கோப்புக்கு எடுத்தும், 6 வழக்குகளில் நீதின்ற விசாரணையை முடித்த புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ரவிக்குமார் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 11 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Previous Post

வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 263 வது பிறந்தநாள் விழா

Next Post

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

Next Post
இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

இளம் சிறார்களுக்கான கோவேக்சின் தடுப்பூசி போடும் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In