தமிழ்நாடு காவல்துறையினருக்கான மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தமிழ்நாடு காவல்துறை யினருக்கான 61 வது மண்டல அளவிலான தடகள போட்டிகள் திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் பிற தடகள போட்டிகளில் கிருஷ்ண ரேகா 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்கள் பெற்றார்.பதக்கங்கள் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பெண் காவலரை காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் IPS வெகுவாக பாராட்டினார்.

