நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வேதாரண்யம் டிச 17
நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி அரங்கத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி அரங்கத்தில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமை வகித்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகைமாலி ஆகியோர் உடனிருந்தனா்.
அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் மக்களை தேடி எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நம் அரசு செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்தவிழாவில் மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.8,41,500 மதிப்பீட்டில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், சமூகபாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4,68,000 மதிப்பீட்டில் கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, முதியோர், மாற்றுத்திறனாளி போன்ற 468 பயனாளிகளுக்கு உதவிதொகையினையும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறையின் சார்பில் ரூ.24,00,000 மதிப்பீட்டில் கொரோனா தொற்றால் ஒற்றை பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கான ஆணையினையும், மாவட்ட தொழில் மைய துறையின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.30,07,689 மதிப்பீட்டில் 5 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.2,50,91,436 மதிப்பீட்டில் ஆசிய வளர்ச்சி நிதியுதவி திட்டத்தின் கீழ் 44 பயனாளிகளுக்கு இலவச வீட்டிற்கான ஆணையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசார்பில் ரூ.14,610 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்பு பெட்டியையும், மாவட்ட சமூகநலத்துறை சார்பில் ரூ.6,93,912 மதிப்பீட்டில் 52 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும், 6 பயனாளிகளுக்கு திருமண உதவி தொகையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.2,42,800 மதிப்பீட்டில்10 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளையும், வேளாண்மை மற்றும் பொறியியல் துறையின் சார்பில் ரூ.9,89,000 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை துறையின் சார்பில் ரூ.21,860 மதிப்பீட்டில் 5 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 10 பயனாளிக்கு புதிய குடும்ப அட்டையினையும், ஊரகவளர்ச்சி துறையின் சார்பில் ரூ.3,31,20,000 மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 120 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையினையும் என மொத்தம் ரூ.6,68,90,807 மதிப்பீட்டில் 743 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட குப்பை கிடங்கு இருந்த இடத்தில் சீர்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்முறைபடுத்தப்பட்டு ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் குப்பை கிடங்கு நீக்கப்பட்டு அந்த இடங்களில் உயிர் நிலங்களாக மாற்றி மரங்கள் நடவும், மக்கள் வசிக்கும் இடமாக பயன்படுமாறு மாற்றப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2031க்குள் நம் மாநிலத்தில் குடிசை வீடுகளை காண்கிரீட் வீடுகளாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10,000 வீடுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை ரூ.30 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிபடுத்தவும், முன்னதாக சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய கடற்கரையை மேம்படுத்த நீலக்கடற்கரைச் சான்று பெறுவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 மாணவ மாணவிகள் பயிலவும் அனுமதி அளித்தும், இது போன்று ஏழை விவசாயிகளின் நலன் மற்றும் பயன்பெறும் வகையில் வேளாண் அறிவியல் கல்லூரியினையும், வேதாரண்யம் நகராட்சியிலிருந்த கூட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு ரூ.50 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்படவும் உள்ளது. தலைஞாயிறு சாலை மழையால் சேதமடைந்து அவற்றை மறுசீரமைப்பு செய்திடவும், நாகப்பட்டினம் மாவட்டத்தை மேலும் வளர்ச்சி அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

