தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் மனு விசாரணை சிறப்பு முகாம் (Petition Mela) நடைபெற்றது.
எஸ் பி ஜெயக்குமார் நடவடிக்கையால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!
————————-
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் மனு விசாரணை சிறப்பு முகாம் (Petition Mela) நடைபெற்றது – ஒரே நாளில் 677 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது- கோவில்பட்டி சாரதா திருமண மஹாலில் நடைபெற்ற சிறப்பு முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
(11.12.2021) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், அந்தந்த உட்கோட்ட காவல்துறை உதவி கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் 16 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து சட்டப்படி உரிய தீர்வு காண காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மனு விசாரணை சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்திற்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜ் மஹால் மற்றும் தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியில் உள்ள பாஸ்கர் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களிலும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டதிற்கு புதுக்கோட்டை பகுதியிலுள்ள சத்யா திருமண மஹாலிலும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு திருச்செந்தூர் குறிஞ்சி திருமண மஹாலிலும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு புதுக்குடியில் உள்ள ஸ்ரீ ரெங்கராஜா திருமண மண்டபத்திலும் மற்றும் ஏரல் பகுதியிலுள்ள ராஜம்மாள் திருமண மஹால் ஆகிய 2 இடங்களிலும், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு கோவில்பட்டி மார்க்கெட் பகுதியிலுள்ள சாரதா திருமண மஹாலிலும், மணியாச்சி உட்கோட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் பகுதியிலுள்ள டிஎம்பி மெக்காவே பள்ளியிலும், விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு
டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் புதூரில் உள்ள சுப்பாராவ் திருமண மண்டபம், விளாத்திகுளம் ஆர்த்தி திருமண மஹலாலிலும், எட்டையாபுரம் ஆவுடையம்மாள் திருமண மஹாலிலும் மற்றும் குளத்தூர் காவல் நிலையத்திலும் ஆகிய 4 இடங்களிலும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும், மெஞ்ஞானபுரம் ஜெய் திருமண மஹாலிலும், நாசரேத் ட்விங்கிள் திருமண மஹாலிலும் மற்றும் தட்டார்மடம் சங்கர பகவதி கல்லூரியிலும் ஆகிய 4 இடங்களிலும் என தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் இந்த பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஜெயக்குமார் அவர்கள் பொறுப்பேற்ற திலிருந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிடும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது முகாம் அமைத்து மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க எஸ் பி ஜெயக்குமார் உத்தரவிட்டது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி தொகுப்பு ஆத்திமுத்து

