நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்களம் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்களம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன்.
1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கோரோனா காலத்தில் கற்றல் இடைவெளி மற்றும் கல்வியறிவை மீட்டெடுக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தன்னார்வலர்களைக் கொண்டு;; பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அதன்படி இல்லம் தேடி கல்வி திட்டம் நம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 82 மையங்களில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து அழிஞ்சமங்கலம், பாலையூர் தன்னார்வலர்கள் வீடுகளில் நடைபெற்ற வகுப்புகளில் மாணவர்களோடு தரையில் அமர்ந்தபடி மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடையே உரையாற்றினார்.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற மாலை வகுப்புகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ மாணவிகளை கவரும் வகையில் விழிப்புணர்வு தப்பாட்டம், கரகாட்டம், பாடல், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருமருகல், வேதாரண்யம் 4 கலைகுழுக்கள் மாவட்டம் முழுவதும் வட்டார கிராமங்களில் பயணம் செய்து இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. நாளை முதல் 2ஆம் கட்ட பயிற்சி மாவட்டம் முழுவதும் தொடங்க உள்ளன. தன்னார்வலர்கள் தேர்வு செய்ய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 மையங்களில் திறன் அறிவு தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள தன்னார்வாலர்கள் இணையதளம் மூலமாக தங்கள் பெயர் மற்றும் கல்விதகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் ஆரிப், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்

