நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று 04.12.2021 நடைபெறுகிறது.
தமிழ்நாடு முழுவதும் கோவிட் – 19 கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் கட்டுபடுத்திட மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களின் ஆணையின்படி ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் 04.12.2021 சனிக்கிழமை காலை 7.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையம் மற்றும் 400 சிறப்பு முகாம்களும் மற்றும் வீடுவீடாக சென்று 25 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடைபெற்று கொண்டுள்ளது.
மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று வேதாரண்யம் அரசுமருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
வேதாரண்யம்

