தூத்துக்குடி மாசு நிறைந்த நகரமாக இருக்க காரணம் ஸ்டெர்லைட் ஆலை இல்லை. வாகனங்களால்தான் காற்று மாசுபடுகிறது : ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி தூத்துக்குடி, நவ.29-
தூத்துககுடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்ட மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தியாகராஜன், செயலாளர் கல்லை.சிந்தா ஆகியோர் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நாங்கள் ஸ்டெர்லைட் ஆலை இடம் பணம் வாங்குவதாக கூறி ஊடகங்களில் வரும் செய்திகள் மேலும் மிகவும் வருந்தத்தக்கது என்றும். ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு பல லட்சம் குடும்பங்கள் வேலை இழந்து தவிக்கின்றனர் என்றும் .கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலையால் தான் காற்று மாசுபடுகிறது என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றும் வாதம் எடுத்து வைத்தனர். தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் காற்று மாசுபடுவது ஸ்டெர்லைட் ஆலையால் இல்லை என்றும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு வாகனங்களால் தான் என்றும் கூறியிருக்கின்றனர் . மத்திய அரசு மாசு கட்டுப்பாட்டு துறை சென்னை, திருச்சி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகமாக காற்று மாசு படுகின்றன என்றும் கூறியிருக்கிறது. கடந்தகால அதிமுக அரசு ஆட்சியாளர்கள் இந்த ஸ்டெர்லைட் மூடுவதற்காக அரசியல் உள்நோக்கம் உடன் இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடினார். என்றும் தற்போது தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தமிழக முதல்வர், மாசு வெளிப்படுத்தாத ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு நல்ல ஒரு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின்போது, ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பின் நிர்வாகிகள் வக்கீல் ஜெயம்பெருமாள், முன்னாள் பஞ்சாயத்து.தலைவர் முருகன், தனலெட்சுமி, நான்சி ஆகியோர் உடனிருந்தனர்.

