நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யம் நவ 27
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகாரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீன்வளத்துறை அறிவிப்பின்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள புஷ்பவனம் ,நாலுவேதபதி , வெள்ளப்பள்ளம் , ஆறுகாட்டுத்துறை , மணியன் தீவு , கோடியக்கரை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தங்களுடைய படகுகளையும் , வலைகளையும் கரையோரங்களில் பாதுகாப்பாக மீனவர்கள் வைத்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

