நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி எதிரே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் மேலும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, மக்தூம் மகன் அப்துல் காதர் என்பவரை ஜான்ஸ் கல்லூரி எதிரே உள்ள இங்கிலீஷ் சர்ச் தென்புறத்தில்,15-09-2021 ம் தேதியன்று இரவு நடைபெற்ற கொலையில் சம்பந்தப்பட்ட எதிரிகள் ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் மேலும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த, செல்லப்பா மகன் பொன்பாண்டி, செல்லப்பா மகன் மணிகண்டன், ராஜா மகன் ஷியாம் என்ற சாம் சுதர்சன் வினோ, திருநெல்வேலி பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த திருமலையப்பன் மகன் மணிகண்டன் என்ற மணி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, இறைப்புவாரி பஞ்சாயத்து மாவடியை சேர்ந்த அறுமுகப்பாண்டி மகன் தங்கபாண்டி,மற்றும் பாளையங்கோட்டை ரஹமத் நகர் 29 வது குறுக்கு தெருவை சேர்ந்த திருமலையப்பன் மகன் சங்கர் ஆகிய ஆறு நபர்கள் மீது, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் பாளை உட்கோட்ட சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் பாலச்சந்திரன் அவர்கள், மற்றும் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி , ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் படி, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி , மேற்படி எதிரிகளான ஆறு நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்

