மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என நெல்லையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்
வடகிழக்கு பருவமழை யின் பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் நடவடிக்கைகளை குறித்து நெல்லையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் நெல்லை டவுன் நயினார்குளம் சாலை மனகவளம் பில்லை நகர் கால்வாய் பெருமாள்புரம் தற்காலிக பஸ் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி நெல்லையை பொருத்தவரை மழை பெய்தாலும் பாதிப்புகள் எதுவும் இல்லை தாமிரபரணி தண்ணீர் வீடுகளுக்குள் போகாமலும் சாலைகளில் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் சில சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு பேட்ஜ் ஒர்க் பணிகளும் நடந்து வருகிறது வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை இருந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயாராகவே உள்ளது
மனக்கவலை பிள்ளை நகரில் உள்ள கால்வாயில் அடைப்புகள் ஏற்படாத வகையில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் கால்வாயை சீரமைக்க ரூபாய் 95 லட்சம் செலவில் திட்டங்களை தீட்டப்பட்டுள்ளன சென்னையில் கனமழை பெய்து வருவதாலே தமிழக முதல்வர் சென்னைக்கு பயணங்களை ஒத்திப்போட கேட்டுக்கொண்டு வருகிறார் தீபாவளி முடிந்து நகரங்களுக்கு திரும்புவதற்கு 17229 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன மழை வெள்ளம் இருந்தாலும் சிறப்பு பஸ்கள் தடையின்றி இயக்கப்படும் தீபாவளியை ஒட்டி 1600 ஆம்னி பஸ்களில் ஏற்கனவே ஆய்வுகள் நடத்தி உள்ளோம் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆய்வின் போது நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் அப்துல் வகாப் எம்எல்ஏ மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுப சீதாராமன் மாநகர செயலாளர் லட்சுமணன் தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் முத்துப்பாண்டியன் சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர், தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன் பேச்சி பாண்டியன் தொமுச தர்மன்முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் எஸ் வி சுரேஷ் பி எம் சரவணன் நமச்சிவாயம் என்ற கோபி எல் ஜசி பேச்சிமுத்து மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வ சூடாமணி பரணி எம் செந்தில்குமார் கலைச்செல்வன் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் அமிதாப் அஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

