• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பசுவந்தனை பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

policeseithitv by policeseithitv
November 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பசுவந்தனை  பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை.

♻️பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பொம்மையாபுரம் பகுதியில் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (51) என்பவரை இன்று (02.11.2021) அதிகாலை தெற்கு பொம்மையாபுரம் பகுதியிலுள்ள அவரது தந்தை வீட்டில் வைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

♻️இதுகுறித்து தகவலறிந்த பசுவந்தனை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

♻️இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

♻️பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு முனியசாமி (53), செல்லத்துரை (52) மற்றும் மேற்படி கொலையுண்ட முருகன் (51) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் முனியசாமியை தவிர மற்ற 2 மகன்களின் பேரில் ஆறுமுகம் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். இதனால் மேற்படி கொலையுண்ட முருகனுக்கும் அவரது அண்ணன் முனியசாமிக்கும் இடையே சொத்து சம்மந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

♻️இந்நிலையில் நேற்று முருகன் தனது தந்தையை பார்ப்பதற்காக தெற்கு பொம்மையாபுரத்திற்கு வந்து அங்கேயே தங்கியுள்ளார். இதனையடுத்து இன்று (02.11.2021) அதிகாலை உறங்கி கொண்டிருந்த முருகனை அவரது அண்ணான முனியசாமி அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார். பின் பசுவந்தனை காவல் நிலையம் சென்று தனது தம்பியை கொலை செய்துவிட்டதாக முனியசாமி ஆஜராகி கூறியதன் பேரில் பசுவந்தனை காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம்

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து

Next Post
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பிறந்த நாள் காணும் 19 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In