தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தீபாவளி கொண்டாடப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (02.11.2021) தீபாவளி வாழ்த்துக்கூறி காவலர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார். மேலும் தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. இளங்கோவன், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கண்ணபிரான், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

