விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சிறுவர்களுக்கு புகையிலை விற்ற நபர் கோட்பா வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.
கடந்த 23.10.2021 அன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவஞனபுரம் தெற்குதெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (45) என்பவர் மளிகை கடை நடத்தி வந்த நிலையில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் அறிவாழகனை கைது செய்தனர்.

எட்டயபுரம் காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்ட எதிரி அறிவழகன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அறிவுரைப்படி எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜின்னா பீர் முகம்மது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் சிவஞானபுரம் தெற்குதெருவை சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மேற்படி எதிரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதுவரை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 14பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

