20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு – மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 586 நாட்கள் மூடிக்கிடந்த ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன . நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் மேளதாளம் முழங்க பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து உடல் வெப்ப பரிசோதனை செய்து , சானிடைசர் கொண்டு கை சுத்தம் செய்து வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர் . இதில் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன் , வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜூலு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தெஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் கருப்பம்புலம் ஞானாம்பிகா தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருந்து மாணவர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பிள்ளையார் , முருகன் , அம்மன் வேடமணிந்த பலரின் பின்னே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர் . இந்த ஏற்பாட்டை பள்ளி தலைமையாசிரியர் சித்திரவேலு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

