• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்சி மாநகரத்தில் உள்ள தற்காலிக பட்டாசு விற்பனை வழிகாட்டு நடைமுறை – ஆலோசனை கூட்டம்

policeseithitv by policeseithitv
October 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்சி மாநகரத்தில் உள்ள தற்காலிக பட்டாசு விற்பனை வழிகாட்டு நடைமுறை – ஆலோசனை கூட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மாநகரத்தில் உள்ள தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களில் உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 1.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், திருச்சி, 2.திருச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் அலுவலக வளாகம், மாநகர ஆயுதப்படை, திருச்சி, 3. தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை முதலாம் அணி அலுவலக வளாகம், 4.C.ரெங்கசாமி, பெரியகடை வீதி, திருச்சி, 5.அமராவதி நுகர்வோர் கூட்டுறவு அங்காடி, திருச்சி மற்றும் 6. சுகந்தி, பாலக்கரை மெயின்ரோடு, திருச்சி ஆகியோர்கள் மற்றும் 53 நபர்கள் என மொத்தம் 59 நபர்களுக்கு, நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் உரிமம் வழங்கப்பட்டது.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த உரிமம் வழங்கிய நபர்களுக்கு, 1.பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும், 2.தீயணைப்பு உபகரணங்கள் அதிக அளவில் வைத்திருக்க வேண்டும், 3. புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குழந்தைகளைபட்டாசு கடை அருகில் அனுமதிக்க கூடாது, 4. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். 5. கோவிட்-19 காரணமாக முகக்கவசம். கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும், 6 எதிரெதிரே பட்டாசு கடைகள் நடத்தக்கூடாது. ஒவ்வொரு பட்டாசு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், 7. அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவைவிட கூடுதலாக சேமிப்பு வைத்திருக்க கூடாது, 8. கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது, மற்றும் 9. சாலை ஓரங்களில் இருக்கும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது, உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்கள்.

மேற்படி நிபந்தனைகள் மற்றும் வெடிபொருள் சட்ட விதிகளை உரிமதாரர்கள் மீறும்பட்சத்தில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாசு உரிமம் எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரித்தார்‌‌‌

Previous Post

நாகை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி – டாக்டர்கள் தீவிர பரிசோதனை

Next Post
நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி – டாக்டர்கள் தீவிர பரிசோதனை

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி - டாக்டர்கள் தீவிர பரிசோதனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In