கோவில்பட்டியில் புத்தக கண்காட்சியை காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், புனித ஓம் கல்வி நிறுவனங்கள் சார்பில் புத்தக கண்காட்சி அக் 30 வரை நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியில் நாவல், வரலாறு, மருத்துவம், சமயம், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் 10 அரங்குகளில். பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் விக்னேஸ்வரன், ஆசியா பார்ம்ஸ் பாபுஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் வரவேற்றார். புத்தக கண்காட்சியினை கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் திறந்து வைத்து பார்வையிட்டார். புத்தக கண்காட்சியில் முதல் விற்பனையை ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் துவக்கி வைக்க ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் வி.எஸ். பாபுபெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் முத்துச்செல்வன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் நூலக ஆய்வாளர் பணி நிறைவு பூல்பாண்டி,ரோட்டரி சங்க நிர்வாகிகள் தயாள்சங்கர்,நடராஜன், டைனமிக் அரிமா சங்க நிர்வாகி பிரபு.தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்க நிர்வாகி ரமேஷ்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க துணை செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

