தமிழகத்தில் இல்லம் தேடி வரும் மருத்துவம் என்ற திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் வேளையில், காவல்துறையினரும் அதுபோன்று அணுகுமுறையை கையாள துவங்கியுள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு, அதற்கு சட்ட ரீதியான தீர்வு கிடைக்க வழிகாட்டி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்ற பிறகு சென்னை மாநகர பகுதியில் காவல்துறையினரின் நடவடிக்கையில் பல அதிரடிகள் தொடர்கிறது.
காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழிகாட்டுதலின் பேரில், சென்னையில்; பொதுமக்கள் குடியிப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று புகார் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றும், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு போன்ற பணிகளை போலீசார்கள இரவு-பகல் பாராமல் சிறப்பாக செய்து வருகின்றனர்.
சென்னை துறைமுகம் பகுதி மிகவும் சென்சிடிவ் ஆன பகுதியாகும். இந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திறமையான காவலர்களை நியமிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் பி1 கடற்கரை காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிக்கு உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட கோடி லிங்கம் அப்பகுதி மக்களால் அதிரடி ஏ.சி என்ற பெயர் பெற்றவர். கொரோனா கால கட்டத்தில் இவரது பணி மெச்சத்தகுந்த பணியாக கருதப்பட்டது. குறிப்பாக, அரசு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி தாங்கள் வெளியே சுற்றுவதால், தங்கள் வீட்டில் வசிக்கும் உங்கள் தாய், தந்தை, குழந்தைகள், தாத்தா, பாட்டி போன்றோருக்கும் கொரோனா நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்படும். இதனால் தேவையின்றி வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என்று எச்சரித்தார்.
தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், அந்த பகுதியில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி ஆணையர் கோடிலிங்கம் மேற்பார்வையில் துறைமுகம் பி1 வடக்கு கடற்கரை காவல்நிலைய ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், பிரேம்குமார், மற்றும் காவலர்கள் ஆகியோர் கூட்டாக துறைமுகம் பகுதி பி1, வடக்கு கடற்கரை காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியான, மண்ணடி, ஆதம் தெரு, தம்பு செட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, 2வது லைன் பீச் ரோடு போன்ற பகுதிகளில் அங்குள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்தனர்.
காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரடியாக நடந்தே சென்று அவர்களது அனைத்து விதமான குறைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வு காண்பதும், மேலும், அப்பகுதியில் சாலையோரங்களில் வசிப்போர்களின் குறைகளை கேட்டறிந்து, அச்சமின்றி வாழவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் காத்துக் கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குழந்தைகள் கல்வி, பெண்கள் சுயதொழில், ஆதரவற்றோர்களுக்கு முதியோர் இல்லத்தில் சேர்ப்பது போன்ற மனிதநேய பணிகளையும் பி1 வடக்கு கடற்கரை சாலை காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும், தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கொரோனா வைரஸ், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகளையும், ரோந்து பணியின் போது காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல், மண்ணடி, தம்புசெட்டி தெரு போன்ற முக்கிய வீதிகளில் சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு குறித்து வணிகர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், அப்பகுதிகளில் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

காவல்துறையினர் பொதுமக்களிடம் நெருக்கம் காட்டி வருவதால், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் தங்கள் குறைகளை நேரடியாக காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதால், தேவையற்ற பிரச்சனைகள்;, சட்டம் ஒருங்கு சீர்கேடு, நிலத்தகராறு, சமூகவிரோத செயல்கள் போன்றவைகள் தவிர்க்கப்படுகின்றன.
காவல்துறையினர் சட்ட ஒழுங்கு பணிகள் மற்றும் போக்குவரத்து பணிகளை மட்டும் கவனிக்காமல், மனிதநேயத்தோடு செய்து வரும் பணிகளை அப்பகுதி பொதுமக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
செய்தி தொகுதி: தலைமைச்செயலகம் சிறப்பு செய்தியாளர்
தலைமைச்செயலக ஆர்.ஆனந்த பாபு

