நாகை மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவையொட்டி கண்காட்சி
நாகப்பட்டினம் மாவட்டம் தோற்றுவித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் நாகை 30 விழா துவக்கமாக அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வாகனம், மியோவாக்கி குறுங்காடுகள் அமைத்தல் மற்றும் கண்காட்சியினை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
இன்று 18.10.2021 முதல் 22.10.2021 வரை மாரத்தான் போட்டி மியாவாக்கி முறையிலான அடர்வனக் காடுகள் உருவாக்குதல், ஊட்டச்சத்து தோட்டம், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நாகையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. 18.10.2021 முதல் 22.10.2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பொருட்கள் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாவட்ட வனஉயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, நாகை எம்.பி செல்வராசு, நாகை எம்.எல்ஏ முகமதுஷாநவாஸ், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

