கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர் உட்பட 2பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் லாலாப்பேட்டை அருகே கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலை தனது தோட்டத்திற்கு சென்ற பசுபதிபாண்டியன் ஆதரவாளரான கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (41), தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிகுமார்(49) ஆகிய இருவரையும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர். ரவுடிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

