கொடைக்கானலில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானல் வாசிகளும் அச்சத்தில் இருந்து வருகின்றனர் குறிப்பாக
கொடைக்கானல் பூண்டியில் போதை காளான் மற்றும் கஞ்சா தாராளமாக புழக்கத்தில் உள்ளது எனவும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர். பூண்டி. கவுஞ்சி. கிளாவரை. பகுதிகளுக்கு சுற்றுலாவாக வெளிமாநிலத்தவர் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக கேரள மாநில இளைஞர்கள் போதைக்காக இங்கு பெருமளவு முகாம் விடுகின்றனர். பூண்டி வனப்பகுதியில் மழைக்காடுகளில் மேஜிக் மஸ்ரூம் என்ற காளான் ஏராளமாக விளைகிறது இவற்றை விற்பனை நோக்கத்திற்காக சிலர் பறித்து செல்கின்றனர். இதற்கு வனத்துறையினர் உடந்தையாக செயல்படுகின்றனர். பூண்டி ஏரி கரையோரப் பகுதிகளில் முகாமிடும் இளைஞர்கள் கஞ்சா மற்றும் காளானை பயன்படுத்தி போதையில் திளைக்கின்றனர். கொடைக்கானல் காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறை இருப்பதால் இந்தப் பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்வதற்கு போதிய காவலர்கள் இல்லாததால் ஏதாவது பிரச்சனை என்று புகார் வந்தால் மட்டுமே இந்த பகுதியில் காவலர்கள் செல்லக்கூடிய நிலை இருப்பதாகவும் இதனால் இந்த பகுதியில் துணிகரமாக கஞ்சா காலம் விற்பனை நடைபெறுகிறது.
இதனால் இந்த பகுதியில் போதை ஆசாமிகள் குவிந்து வருகின்றனர் இவர்களது அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பெண்களிடம் போதை ஆசாமிகள் அத்துமீறுவதாக உள்ளூர்வாசிகள் புகார் தெரிவித்திருக்கின்றனர். போதைக்காக மேல்மலை கிராமங்களில் முகாமிடும் வெளிமாநிலத்தவரால் கலாச்சாரம சீரழிவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கிராமத்தினர். வேதனை தெரிவித்தனர். போலீசார் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என பூண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் சமீபகாலமாக கொடைக்கானலில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் புற்றீசல் போல் உதயமான விடுதிகளில் இளைஞர்கள் மற்றும் போதை ஆசாமிகள் பெண் சபலம் உள்ளவர்களை மடக்கி மசாஜ் என்ற பெயரில் ஹைடெக் விபச்சாரம் நடப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்தது.

குறிப்பாக கொடைக்கானல் காவல் நிலையம் பின்புறம் துணிகரமாக மசாஜ் சென்டர் இயங்கியதாக ஒரு படுகிறது சமீபத்தில் இந்த செய்தி ஊடகத்தில் வெளியான பிறகு கொடைக்கானல் புதிய டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் ஆகியோர் தலைமையில் போலீசார் போலி மசாஜ் சென்டர்கள் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது இந்த விஷயத்தை அறிந்த போலி மசாஜ் சென்டர்கள் கடந்த நான்கு தினமாக செயல்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள் என பயந்து சிலர் மசாஜ் சென்டரை மூடி இருந்தாலும் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என கூறுகிறார்கள் ஆகையால் போலி மசாஜ் சென்டர் மற்றும் கஞ்சா காளான் விற்பனை ஆகியவற்றிற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி காவல் அதிகாரிகளாக விளங்கும் கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் ஆகியோர் தலைமையில் சமூகவிரோத செயல்களை மட்டுமே கண்காணிக்க தனிப்படை ஒன்று உருவாக்கி தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே இங்கு நடைபெறும் சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர் கோடை மக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் கொடைக்கானல் சார்ந்த பெண்கள் விவசாயிகள் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பு காவல்துறை நடவடிக்கை விரைவில் நாமும் எதிர்பார்ப்போம்


