• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குலசையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திடீர் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

policeseithitv by policeseithitv
October 11, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படடுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் 2-ம் திருநாளில் மட்டும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று காப்பு வாங்கி கைகளில் கட்டி வேடம் அணிந்தனர். தசரா குழுவினரும் மொத்தமாக காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதம் இருந்த பக்தர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் வேடம் அணிந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களில் பக்தர்களிடம் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தசரா திருவிழாவின் 3-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 5-ம் திருநாளான நேற்று இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.
6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  தொடர்ந்து 10 முதல் 12-ம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.
Previous Post

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

Next Post

மூட நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை, வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்கள்

Next Post
மூட நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை, வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்கள்

மூட நம்பிக்கையில் இறந்த தாயின் உடலை, வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்கள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In