தூத்துக்குடியில் வ.உ.சி. 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாராத்தானை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக வ.உ.சிதம்பரம் கலை கல்லூரியின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கான மினி மாராத்தானை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சிவசங்கரன், வ.உ.சி கல்லூரி செயலர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு, மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக், முக்கிய பிரமுகர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மினி மாராத்தான் போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 1700 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தொடங்கி தமிழ்சாலை, வ.உ.சி. சாலை, வ.உ.சி. பழைய துறைமுகம், பனிமயமாதா கோவில், ஜார்ஜ் ரோடு, தலைமை தபால் நிலையம், தெற்கு காவல் நிலையம் வழியாக 9 கி.மீ தொலையில் வ.உ.சிதம்பரம் கல்லூரியை வந்தடைந்ததது. இப்போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு பரிசு தொகையுடன் வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

