நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகளுக்கு அறுவடையை உரிய காலத்தில் முடிக்கவும். மேலும், விவசாயிகளின் நலன் கருதி; நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திடவும், நெல் கொள்முதல் நிலையங்களின் பாதுகாப்பு குறித்தும் உரிய அலுவலர்களிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மேலபூதனூர் ஊராட்சி மற்றும் திருமருகல் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதையும், பாதுகாப்பாக வைக்கப்படும் இடத்தையும் பார்வையிட்டார்.
விவசாயிகளின் வயல்களில் விளைவிக்கப்படும் நெல் பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். வேளாண்மை பொறியியல்துறை சார்பில் உள்ள நெல் உலர்த்தும் இயந்திரத்தையும் மாவட்;ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழையூர் ஒன்றியம் செருதூர் மீனவ கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் கால முன்னெச்சரிக்கை ஒளிப்பான் செயல்படும் விதத்தை பார்வையிட்டும், செருதூர் மற்றும் பிரதாபராமபுரத்திலும் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து தண்ணீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை சரியான முறையில் பராமரிக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன், வேளாண்மை துறை இணை இயக்குநர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

